Saturday, January 28, 2012

கைகோர்த்தேன் ஒருநாள்..!

சிலநொடிகள் பரபரப்பாய்..

சிநேகிதம் வெதுவெதுப்பாய்..

கரங்களில் மென்மையும்..

பார்வையில் எதிர்பார்ப்புமாய்..

கைகோர்த்தேன் ஒருநாள்..!

 

முகம்பார்க்க முயல்கையில்..

ஆர்வத்தின் அதீதத்தால்..

உணர்வினை உயிர்ப்பித்து.. 

கனவதைக் கலைத்தோடினாள்..!

கவிதையே! யாரடி நீ!

Tuesday, December 13, 2011

சுட்ட காதல்..!

விட்டிலைப் பார்த்து விமர்சித்தேன் சிலகாலம்..!
விழுந்தது தீயிலென்றறிந்தும் விரும்புவானேனென்று?!
வியப்பாய் சிரித்தது எனையெள்ளி நகையாடி..!
உனைச்சுட்ட காதல் தனிரகமோ என்றே..!!

Thursday, December 1, 2011

நானும் மழலையாய்..!

இதய அறைகளில் இன்னும் இருந்துகொண்டு..

அடிக்கடி புன்னகை.. அரும்பச் செய்கிறாய்..!

துடிக்கும் இதயத்தை கெட்டியாய் பிடித்து..

வலிக்கிறதா என்று மழலையாய் கேட்கிறாய்..!

உள்ளூரும் சுகமும்.. உயிர் கரையும் வலியும்..

தந்த நீ எதிரியா? நண்பியா? 

இதுவரை விளங்காது.. நானும் மழலையாய்..!

Sunday, November 13, 2011

நெஞ்சக்கடல்..!

நீ தந்த வலிகள்.. அடிக்கடி வந்து போகும் அலைகள்..!
நிலவே உன் தீவிரம் கொஞ்சம் குறைப்பாயா? - என் 
நெஞ்சக்கடல் கொஞ்சம் அமைதியாகட்டும்..!

Thursday, August 25, 2011

வீழ்த்திப் பார்..!

புதைத்தோ வீழ்த்தியோ - எனை 
சிதைத்தோ சிதையிலிட்டோ
எத்தனை வழிகளுண்டோ 
அத்தனையும் செய்தே பார்!!

விதைத்தேனோ எனநீ விளிக்க
என்விடியலைப் படைப்பேன்! காண்!

Wednesday, July 27, 2011

இதயங்கொத்தி..!

அவள் வெறுத்த அத்தனையும்.. என்

அகராதியிலிருந்தே பெயர்த்தெடுக்கப்பட்டன..!

நாட்களும் நிகழ்வுகளும் அவளுக்காகவே..

"அவள்" எனும் அலகுகளால் உருக்கொண்டன..!

உணர்வுகளால் "உருகியதலோ" என்னவோ?

உருக்குலைந்து சரிந்து கிடக்கிறேன்..!

அலகுகளால் கொத்தி பறந்துபோனவளே..!

இதயப்பொந்துகளில் இன்னும் உன் இருப்பிடங்கள்..!

வாசம் மாறாமல்.. வண்ணம் மாறாமல்..

ஈரமோ, திரமோ.. இன்னும் கசிந்துகொண்டே...!

Saturday, July 23, 2011

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...!

தொலைந்து கொண்டே இருக்கிறேன்...! உனைத்தான் 
தேடிக்கொண்டிருக்கிறேன் எனத் தெரியாமலே..!
அருகிலிருந்து சிரிக்கிறாய் - அத்தனை முறையும்..!