Sunday, January 27, 2008

எரிகின்றேன் நான்..!



எரியாத மெழுகுவர்த்தி..!
பிறந்தநாள் பரிசாய்..!
எரிகின்றேன் நான்..!
பிரிந்துநீ தூரமாய்...

மழை மீது கோபம்

மணம் வீச மழை!
மழை மீது கோபம்
என்னினும் அதிகமாய் உன்மீது உரிமை கொண்டதே!
மணம் மீது பாசம்
ஒவ்வொரு முறை நுகரும் போதும் என் நினைவு வருமென்று நீ கூறியதால்..

உணர்ந்தேன்..!


அழகாய் கைகள் நீட்டி அழைத்தாய்..!
அருகினில் வந்தேன்..! என் நிழல் உணர்ந்து..
மீன் விழிகள் உருட்டி... விரைந்து எனை நோக்கினாய்..!
உனக்கு மேலே என் கரங்கள் ஊர்ந்தன..!
சட்டென.. இறுக்கமாய்.. விரல்களை பிடித்தாய்..!
பிடித்த இதமான பிடியில் உணர்ந்தேன்.. மழலையின் சுகத்தை..!

"என்னடா மூடன் நீ"

ஆடவில்லை..! அசையவில்லை..!
ஐயகோ! மரமே நீ இறந்தோ விட்டாய்..?!
காற்றது உன்னை புறக்கணித்தக்கால்..?!

காற்றோடு மழைவரும் முன்னே மண்வாசம்..
மெல்ல கண்மூடி அனிச்சையாய் கைவிரித்து
காற்றை உயிர்கூட்டில் கற்றையாய் உள்ளிழுத்தேன்.

குளிர்ந்த மரம்.. மெல்ல குசுகுசுத்தது..
"என்னடா மூடன் நீ" என்று..!

Wednesday, January 9, 2008

தாடி - தேடலின் அளவோ?!

உன்னைப்போல் ஒருத்தி கிடைப்பாள்
என்ற என் தேடலின் காலத்தை
சட்டென்று வளர்ந்த என் தாடி சொல்லுதடி!

மறு ஜென்மம்..!

உலகை துறக்கவும் துணிந்தேன்!
உனைப்பிரிந்த சில தினங்களில்…
கன்னக்குழி விழும் நம்குழந்தை
சொன்னது உன் மறுஜென்மத்தை!
நடைமுறை புரிந்தது! மெல்ல நான்
உன் கன்னத்தில் முத்தமிட்டேன்!

உன்பெயர் சொல்லி..


ஊருக்கு வெளியே வரிசை
வரிசையாய் பனைமரங்கள்..!
நாம் சந்திக்க தனித்து ஒருபனை!
அவ்வழி கடக்கும் போதெல்லாம்
உன்பெயர் சொல்லி சலசலக்கிறது!

சிநேகம் தெரியுதடி..!



எந்த நேரம் நான் எதை கேட்பேன்
என்பதை தெள்ளமாய் அறிந்து,
அந்த நேரம் அதை எடுத்துக்கொண்டு,
“ஐயோ! மறந்துவிட்டேனே!” என்று
சிறிதுநேரம் செல்லமாய் ஊடி, பின் அதை
அளித்து புன்னகைக்கையில், அறிந்தேனடி
என்மீதான உன் சிநேகத்தை!

வட்டமடா வாழ்க்கை..!



எத்தனை தூரம் பயணித்தும்
எத்தனை முறை வெற்றியடைந்தும்
திருப்தி இல்லாமல் வாழ்க்கை!
சட்டென ஞானம் பிறக்க, சொன்னேன்
“வட்டமடா வாழ்க்கை” என்று!!
புன்னகைத்துக் கொண்டே… :-) !

மெல்ல உணர்கிறேனடி..!


கண்கள் அனிச்சையாய் கலங்க
நாக்கினை நறுக்கென்று கடித்துக்கொண்டேன்..!
அரை நொடியில் அத்தனையும் உணர்ந்துகொண்டு
அருகினில் வந்து தலைகோதுகையில்.. மெல்ல
உணர்கிறேனடி தாய்மையின் மகத்துவத்தை..!