பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தாள் - உடனே
பன்னிரெண்டு நூறுகளுக்கு ஒரு வேலை காத்திருந்தது!
இருந்தும் பொறியியல் படித்தாள் - இன்று
இருபது ஆயிரங்கள் ஒவ்வொரு மாதமும்!
இருந்தும் மேற்படிப்புக்கு ஏற்பாடுகள் ஏராளம்!
பின்னே இலகரங்களில் மாதச்சம்பளமாம்!
படித்த அவள் இப்படி நினைக்கிறாள்..!
இரு பிள்ளைகள் பெற்றேன்
ஒரு பிள்ளை இடுப்பில்..
தலைக்கு நாற்பது நிதமும்
தப்பாமல் வயிறு நிரம்பிட..
இடுப்பில் இருப்பவன் இறங்கட்டும் நடக்க
இன்னொரு பிள்ளை அடுத்த வருடம்..!
இதுமட்டும் நடந்தால் இருமடங்காகும்
என் குடும்ப வருமானம்...!!
பேதை என் நினைவுகள் இப்படி..!?!
சாலை ஓர பிச்சைக்காரியாய்
சிவப்பு விளக்கு விழுந்தது.
" சிவகாமி.. அந்த காராண்ட போ..! "
அய்யா..! அம்மா! கைகள் நீள நான் களத்தில்.
No comments:
Post a Comment