Friday, July 15, 2011

அழைக்கவா?

ஒருமுறை அழைக்கலாம் எனத் தோன்றுகிறது! - அழைத்தால் 
நீ அழக்கூட செய்யலாம் எனத் தோன்றுகிறது! - அழுது 
எனை அணைத்துக் கொள்வாய் எனத் தோன்றுகிறது! 
அந்த அணைப்போடு... 
அடுத்த உலகத்துக்குக் கூட நடந்தே போகவும் தயார்..!
..
"அழைக்கவா?!"....... நினைக்கையிலேயே
சில துளிகள்.. தெறித்து விழுந்தன.. 
நெஞ்சை நனைத்தன.. விழிகளில் ஈரம்..!

No comments: