நண்பர்களோடு இயல்பாய் பேசிக்கொண்டிருப்பேன்..!
எதேச்சையாய் அவள் கடந்து போவாள்..! - சில நொடிகள்
ஏதோ ஓருலகம் சென்று சட்டென்று வருவேன் பூமிக்கு..!
கடைசியாய் சொன்னதை திரும்ப சொல்லச் சொல்லி...
நண்பர்களிடம் செல்ல அடிகள் வாங்கி புன்னகைப்பேன்..!
புன்னகைக்கையில் தெரியுதடி...
உனக்கும் எனக்குமான சிநேகம்..!
No comments:
Post a Comment