"இன்று அமாவாசை" என்றாள் அவள்.
"நிலவு என்னோடிருந்தால் உலகுக்கு அமாவாசைதானே..!" என்றேன் நான்.
"பௌர்ணமியும் வருமே?!" அவள் விளிக்க..
"அன்று, இருநிலவு சாத்தியம்..!" என்றேன் நான்.
"பொய்யுரைத்தல் அறமோ?!" என்றாள்.
"காதலால்..கவிதையாய்.. ஆம்" என்றேன் நான்.
புன்னகைத்து தோள் சாய்ந்தாள்..!
நிலவோடு.. இல்லாத நிலவை மீண்டும் ரசிக்க ஆரம்பித்தேன்..!
No comments:
Post a Comment