நின் இதழ்கள் தொட்டபின்னே
நீரும் சுவை கொண்டதடி பெண்ணே!
பழச்சாறும் சுவை கெட்டதடி கண்ணே!
Tuesday, November 27, 2007
உன் ஒற்றை முத்தத்தில்!
நின்னை படைக்கையில் பிரம்மன்
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!
நிச்சயம் மது அருந்தி இருப்பான் -இல்லை
நிரம்ப ஐஸ்கிரீம் உண்டிருப்பான்! - பின்னே?!
இப்படி உளறுகிறேன் .... உன் ஒற்றை முத்தத்தில்!
Thursday, November 22, 2007
சிநேகம் தெரியுதடி..!
தூரத்தில் இருந்தாலும், நீ தடுமாறும்போது
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!
துடிக்கும் ஒரு துடிப்பில், குனிந்து
விரையும் என் கரங்களில், தெரியுதடி
உனக்கும் எனக்குமான சிநேகம்!
அவள் துப்பட்டாவின் ஸ்பரிசம்!
எதிர்பாராமல் கொஞ்சிய நின்
துப்பட்டாவின் குஞ்சங்கள்!
உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!
தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!
துப்பட்டாவின் குஞ்சங்கள்!
உடல்சேராமல் உயிரை என்
முகத்தோடு உறிஞ்சும்!
தேவையை பூர்த்திசெய்த
தென்றலுக்கு நன்றி!
Wednesday, November 21, 2007
Tuesday, November 20, 2007
தொடரலும் சுகமோ..?!
Thursday, July 5, 2007
பேதை நினைவுகள்..!
பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தாள் - உடனே
பன்னிரெண்டு நூறுகளுக்கு ஒரு வேலை காத்திருந்தது!
இருந்தும் பொறியியல் படித்தாள் - இன்று
இருபது ஆயிரங்கள் ஒவ்வொரு மாதமும்!
இருந்தும் மேற்படிப்புக்கு ஏற்பாடுகள் ஏராளம்!
பின்னே இலகரங்களில் மாதச்சம்பளமாம்!
படித்த அவள் இப்படி நினைக்கிறாள்..!
இரு பிள்ளைகள் பெற்றேன்
ஒரு பிள்ளை இடுப்பில்..
தலைக்கு நாற்பது நிதமும்
தப்பாமல் வயிறு நிரம்பிட..
இடுப்பில் இருப்பவன் இறங்கட்டும் நடக்க
இன்னொரு பிள்ளை அடுத்த வருடம்..!
இதுமட்டும் நடந்தால் இருமடங்காகும்
என் குடும்ப வருமானம்...!!
பேதை என் நினைவுகள் இப்படி..!?!
சாலை ஓர பிச்சைக்காரியாய்
சிவப்பு விளக்கு விழுந்தது.
" சிவகாமி.. அந்த காராண்ட போ..! "
அய்யா..! அம்மா! கைகள் நீள நான் களத்தில்.
Wednesday, May 30, 2007
கண நேரம்..!
கண நேர சலனம்..
ஒரு உயிர் ஜனித்தது..! என் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.!
கண நேர தாமதம்..
ஒரு உயிர் பிழைத்தது. .! என் வழியில் ஓர் எறும்பு..!
ஒரு உயிர் ஜனித்தது..! என் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.!
கண நேர தாமதம்..
ஒரு உயிர் பிழைத்தது. .! என் வழியில் ஓர் எறும்பு..!
Wednesday, May 23, 2007
வானமே கர்வப்படாதே..!
என் சிறகுகள் சிறியவை தான்..!
வானமே கர்வப்படாதே..! - என்
ஆயுளுக்குள் உனை அளந்து காட்டுவேன்..!
வானமே கர்வப்படாதே..! - என்
ஆயுளுக்குள் உனை அளந்து காட்டுவேன்..!
Wednesday, May 16, 2007
பெண்டிரும் கயல்நிகரே..!!

அலையாட புறஞ்சடையும் நீராட வழுவழுப்பும்
சலசலத்த வளையிருப்பும் நடனத்து தீண்டுதலும்
சதையுண்ணுஞ் சாதிக்கே நாண்சேர உணவாகி
கார் அகல பசலையுஞ் சுமக்குமெம் கெண்டைவிழிப்
பெண்டிரும் கயல்நிகரே..!!
பொருள்:
மீன்: அலைபோல ஆடும் வாலிருக்கும், நீரில் ஆடி வழுவழுக்கும், சலசலப்புடன் வளைகளில் இருக்கும், நாம் தொடும்பொழுது துள்ளி நடனமாடும், மாமிசம் உண்பவர்களுக்கு உணவாகும். கார்காலம் நீங்கி வாடை வரும்பொழுது ஒருவித பசலை போன்ற நோயுறும். பெண்ணின் கண் போன்றது மீன்.
பெண்: அலைபோல ஆடும் சடையுடனிருப்பாள், பூப்படைந்து பூப்பு நீராடுவாள், பருவத்தில் வழுவழுப்பான தேகம் கொண்ட அவளை தலைவன் தீண்டும் பொழுது, வெட்கத்தில் நடனமாய் நெளிவாள். சதையுண்ணும் - பெண்ணுடல் சுகிக்கும் இனமாகிய தலைவனுக்கு விருந்தாகுவாள். கூடல் கார்கால நிகழ்வு. கூடல் நீங்கி தலைவனை பிரிகையில் பிரிவுத்துயரால் நெற்றியில் பசலை நோய் வரும். மீன் போன்ற கண்ணுடையவள்.
Thursday, April 19, 2007
புல்லாங்குழல்..!!
Thursday, April 5, 2007
Monday, April 2, 2007
நெடுநாள் கனவு..!!
கவிஞனாக வேண்டும்..
நெடுநாள் கனவு..!!
நனவானது உன்னால்,
நீ வேண்டும் எனக்கு..
காதலிக்க அல்ல,
சகியே! மறுக்கவாவது..!!
நெடுநாள் கனவு..!!
நனவானது உன்னால்,
நீ வேண்டும் எனக்கு..
காதலிக்க அல்ல,
சகியே! மறுக்கவாவது..!!
எண்பதுகளில்...இது எதார்த்தம்...!
பிறந்த முதல்நாள் பிள்ளை அழுதது
தாய் சிரித்தாள் தழுவிக்கொண்டு,
நாட்கள் நகர்ந்தன உறவுகள் வினவின
பெண்ணை பெற்றாயோ இம்முறையும்?
வந்தோர் சென்றனர், தாய் அழுதாள்
குழந்தை சிரித்தது....கள்ளிப்பாலருந்தி...!!
தாய் சிரித்தாள் தழுவிக்கொண்டு,
நாட்கள் நகர்ந்தன உறவுகள் வினவின
பெண்ணை பெற்றாயோ இம்முறையும்?
வந்தோர் சென்றனர், தாய் அழுதாள்
குழந்தை சிரித்தது....கள்ளிப்பாலருந்தி...!!
Sunday, January 7, 2007
என் இந்தியா..!!
இந்தியா ஒளிர்கிறதாம்..! இருக்காதே பின்னே..?
நூறுகோடி சூரியன் ஓரிடத்தில் இருந்தால்..?!
மார்தட்டி சொல்வேன்..! மறுத்துப்பார் முடிந்தால்..
சூரியன் பூமியை சுற்றுகிறது இந்தியா இருப்பதால்..!
ஈருலகப்போர்கள் ஆயுதம் மலிந்ததால் நடந்திருக்கலாம்.
இந்தியாவும் போரிடுகிறது அறிவெனும் ஆயுதத்தால்..!
தடுக்க முடியாத தனிப்பெரும் படை இதோ..!
கத்தியின்றி ரத்தமின்றி கணிணியை கையில் கொண்டு..!
நூறுகோடி சூரியன் ஓரிடத்தில் இருந்தால்..?!
மார்தட்டி சொல்வேன்..! மறுத்துப்பார் முடிந்தால்..
சூரியன் பூமியை சுற்றுகிறது இந்தியா இருப்பதால்..!
ஈருலகப்போர்கள் ஆயுதம் மலிந்ததால் நடந்திருக்கலாம்.
இந்தியாவும் போரிடுகிறது அறிவெனும் ஆயுதத்தால்..!
தடுக்க முடியாத தனிப்பெரும் படை இதோ..!
கத்தியின்றி ரத்தமின்றி கணிணியை கையில் கொண்டு..!
Subscribe to:
Posts (Atom)